ஜோதிட மேதை அமரர் பி. எஸ். ஐயர் அவர்களின் கூற்று…

ஜோதிட மேதை அமரர் பி. எஸ். ஐயர் அவர்களின் கூற்று.;-

ஜோதிடம் என்பது இந்தியாவின் புராதன சொத்து ஆகும். உலகம் தோன்றிய நாள் முதலாய் ஜோதிட சாஸ்திரம் நிலவி வந்துள்ளது. இராமாயணம், மகாபாரதம், போன்ற இதிகாசங்களும் இதற்குச் சாட்சியாகும். இது வேதத்தின் கண்களாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இன்றைய இந்தியாவில் இரட்டைவேடதாரிகளான அரசியல்வாதிகள் ஒரு பக்கம் ‘ ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை ‘ – என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு போலியான அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்கள்தான் ஜோதிடத்தின் முதல் எதிரிகள்.

       ஜோதிடத்தின் பெயரைக் கெடுக்கும் இரண்டாவது எதிரிகள் ஜோதிடர்கள்தான். முக்கியமாக தமிழ்நாட்டில் ஜோதிடர்கள் சிறந்த நூல்களைப் படிப்பதும் இல்லை. முறைப்படி இந்த சாத்திரத்திலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முயல்வதும் இல்லை. ஏதேனும் இரண்டு நூல்களைப் படித்துவிட்டுத் தம்மைத் தாமே பெரிய பண்டிதர்கள் அல்லது விசித்திர ஜோதிடர்கள் என்கிறார்கள். ஜோதிட வித்தை குருகுலத்தில் படித்தால்தான் பலன் அளிக்கும் என்பது சாஸ்திரம். ஆனால் தமிழ்நாட்டில் மணி எடுத்தவர்கள் எல்லாம் பூசாரிகள் ஆகிவிடுகிறார்கள். குரு சிஷ்ய பரம்பரையே இல்லாமல் போய்விட்டது. கேரளத்தில் இன்றும் கூட ஜோதிடர்கள் ‘ நான் இன்னாரது சீடன் ‘ – என்று சொல்லிக் கொண்டு பெருமைப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் இப்படிச் சொல்லிக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.

       இரண்டாவதாக, தமிழ் நாட்டில் ஜோதிடம் வளர்ச்சி அடையாததற்கு முக்கிய காரணம் ஆதாரபூர்வமான புத்தகங்கள் இல்லாததுதான். தமிழில் ஜோதிட நூல்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ‘ “குமாரசுவாமியம்” ‘, வேதாந்த தேசிகரது – ‘ “ஜாதக மார்க்கம்” ‘ மற்றும் கீரனூர் நடராஜனின் ‘ “ஜாதக அலங்காரம்” ‘ இவற்றைத் தவிர வேறு நூல்கள் எல்லாம் முரண்பாடு உள்ளவைகளாகக் காண்கின்றன. காக புஜண்டர் நாடி போன்ற நூல்கள் அச்சுப் பிழை, மொழிப் பிழை இவற்றின் காரணத்தால் பயனற்றதாக ஆகிவிடுகின்றன. சமீபத்தில் சென்னை ஓரியண்டல் லைப்ரரிக்கார்ர்கள் ‘ “சப்த ரிஷி நாடி” ‘ யின் முதல் ஆறு இராசிகளை மட்டும் பிரசுரித்தார்கள். அதற்குப் பிறகு அவற்றின் பிரசுரத்தை அறவே நிறுத்திவிட்டார்கள்.

       கேரளத்தில் இன்றும் கூட பரம்பரை ஜோதிடக் களரிகள் அனேகம் இருக்கின்றன. அவர்கள் தத்தம் சீடர்களை முதலில் ஸமஸ்கிருத மொழியில் சப்தம், தாது, வியாகரணம் இவற்றைப் படிக்க வைத்துவிட்டுப் பிறகு முறைப்படி கோளம், கணிதம் இவற்றைக் கற்பிக்கிறார்கள். அவர்களது கணித முறை பண்டைய காலத்தியது ஆகும். அது ‘ “கடபயாதி” ‘ முறையில் சூத்திரங்கள் கற்பிக்கப்பட்டன. எனவே அவர்கள் “லீலாவதி”, “ஆரிய பட்டீயம்” முதலியவற்றை வெகு கிரக இருக்கைகள், கிரக சேர்க்கைகள், “வருஷாதி நூல்”, தெசா, புத்தி பலன்கள், யோகங்கள் அவற்றின் பலன்கள் இப்படி, பலவிதமான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. “பாவ குதூகலம்” என்ற நூல் பாவ வாரியாக பலன்களை எடுத்துரைக்க உதவுகிறது. “ஜாதக ஆதேஷ தேச மார்க்கம்” – பல அதிகாரபூர்வமான நூல்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட தொகுப்பு நூலாகும். “பராசர ஹோரை” – ஜோதிட சாத்திரத்தின் அடிப்படை நூலாகும்.

       அதற்கு அடுத்ததாக வராஹிமிஹிரரது “ஹோரா சாஸ்திரம்”, “சாராவளி”, “பலதீபிகை”, “ஜாதக பாரிஜாதம்”, “சௌனக ஹோரை”, ஸ்கந்த ஹோரை போன்ற பல அடிப்படை நூல்கள் மற்றும் பல பாவ முறை நூல்களும் மிகப் பழமையான ஆனால் ஆணித்தரமான வழிகாட்டும் நூல்களாகும். “தாசாத்யாயி” – என்பது வராஹிமிஹிரரின் ஹோரைபற்றிய அபூர்வமான விளக்க நூலாகும். இவையெல்லாம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும். சமீபகாலமாக பணம் சம்பாதிப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தம்மைத்தாமே பெருமைப் படுத்திக்கொண்ட, சில ஜோதிட சிகாமணிகள் அரை குறையாக ஸமஸ்கிருதம் தெரிந்தும், தெரியாமலும், சரியாகவோ , தப்பாகவோ இவற்றையெல்லாம் அர்த்தம் எழுதிப் பிரசுரித்து உள்ளார்கள். அவர்கள் இப்படிச் செய்ததில் அநேக கோடி தவறுகள் இருந்தாலும் கூட அவர்களின் முயற்சியை நாம் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால், அவர்கள் இனியாவது ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு அதன் பொருளை மற்றும் உபயோகத்தை நன்கு புரிந்து கொண்டு இத் தொண்டைச் செய்வார்களானால் ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு இவை பயனுள்ளதாக அமையும். ( இப்படி நாம் எழுதுவதை அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி கண்டிப்பதாக யாரும் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.)



  —  அமரர் பி. எஸ். ஐயர்.

15 Amazing Predictions made by Sage Veda Vyasa about the Kalyuga…

Sri. Vyasa Maharishi’s prediction about Kaliyuga.. That is what  we are experiencing now.

📜15 Amazing Predictions made by Sage Veda Vyasa about the Kalyug.

In the last canto of the Bhagavata Purana there is a list of predictions and prophecies about the dark times for the present age of Kali Yuga. The following 15 predictions, written 5,000 years ago by sage Ved vayasa, are amazing because they appear so accurate. Despite the negative tone of these prophecies, there is still one bright spot for all of us, which is mentioned at the end.

📜Prediction 1:

Religion, truthfulness, cleanliness, tolerance, mercy, duration of life, physical strength and memory will all diminish day by day because of the powerful influence of the age of Kali.

Source: Srimad Bhagavatam 12.2.1

sri-suka uvaca
tatas canu-dinam dharmah
satyam saucam ksama daya
kalena balina rajan
nanksyaty ayur balam smrtih

📜Prediction 2:

In Kali Yuga, wealth alone will be considered the sign of a man’s good birth, proper behaviour and fine qualities. And law and justice will be applied only on the basis of one’s power.

Source: Srimad Bhagavatam 12.2.2

vittam eva kalau nṝṇāḿ
janmācāra-guṇodayaḥ
dharma-nyāya-vyavasthāyāḿ
kāraṇaḿ balam eva hi

📜Prediction 3:

Men and women will live together merely because of superficial attraction, and success in business will depend on deceit. Womanliness and manliness will be judged according to one’s expertise in sex, and a man will be known as a brahmana just by his wearing a thread.

Source: Srimad Bhagavatam 12.2.3

dāmpatye ‘bhirucir hetur
māyaiva vyāvahārike
strītve puḿstve ca hi ratir
vipratve sūtram eva hi

📜Prediction 4:

A person’s spiritual position will be ascertained merely according to external symbols, and on that same basis people will change from one spiritual order to the next. A person’s propriety will be seriously questioned if he dos not earn a good living. And one who is very clever at juggling words will be considered a learned scholar.

Source: Srimad Bhagavatam 12.2.4

lińgaḿ evāśrama-khyātāv
anyonyāpatti-kāraṇam
avṛttyā nyāya-daurbalyaḿ
pāṇḍitye cāpalaḿ vacaḥ

📜Prediction 5:

A person will be judged unholy if he does not have money, and hypocrisy will be accepted as virtue. Marriage will be arranged simply by verbal agreement, and a person will think he is fit to appear in public if he has merely taken a bath.

Source: Srimad Bhagavatam 12.2.5

anāḍhyataivāsādhutve
sādhutve dambha eva tu
svīkāra eva codvāhe
snānam eva prasādhanam

📜Prediction 6:

A sacred place will be taken to consist of no more than a reservoir of water located at a distance, and beauty will be thought to depend on one’s hairstyle. Filling the belly will become the goal of life, and one who is audacious will be accepted as truthful. He who can maintain a family will be regarded as an expert man, and the principles of religion will be observed only for the sake of reputation.

Source: Srimad Bhagavatam 12.2.6

dūre vāry-ayanaḿ tīrthaḿ
lāvaṇyaḿ keśa-dhāraṇam
udaraḿ-bharatā svārthaḥ
satyatve dhārṣṭyam eva hi
dākṣyaḿ kuṭumba-bharaṇaḿ
yaśo ‘rthe dharma-sevanam

📜Prediction 7:

As the earth thus becomes crowded with a corrupt population, whoever among any of ther social classes shows himself to be the strongest will gain political power.

Source: Srimad Bhagavatam 12.2.7

evaḿ prajābhir duṣṭābhir
ākīrṇe kṣiti-maṇḍale
brahma-viṭ-kṣatra-śūdrāṇāḿ
yo balī bhavitā nṛpaḥ

📜Prediction 8:

Harassed by famine and excessive taxes, people will resort to eating leaves, roots, flesh, wild honey, fruits, flowers and seeds. Struck by drought, they will become completely ruined.

Source: Srimad Bhagavatam 12.2.9

śāka-mūlāmiṣa-kṣaudra-
phala-puṣpāṣṭi-bhojanāḥ
anāvṛṣṭyā vinańkṣyanti
durbhikṣa-kara-pīḍitāḥ

📜Prediction 9:

The citizens will suffer greatly from cold, wind, heat, rain and snow. They will be further tormented by quarrels, hunger, thirst, disease and severe anxiety.

Source: Srimad Bhagavatam 12.2.10

śīta-vātātapa-prāvṛḍ-
himair anyonyataḥ prajāḥ
kṣut-tṛḍbhyāḿ vyādhibhiś caiva
santapsyante ca cintayā

📜Prediction 10:

The maximum duration of life for human beings in Kali Yuga will become 50 years.

Source: Srimad Bhagavatam 12.2.11

triḿśad viḿśati varṣāṇi
paramāyuḥ kalau nṛṇām

📜Prediction 11:

Men will no longer protect their elderly parents.

Source: Srimad Bhagavatam 12.3.42

na rakshishyanti manujah
sthavirau pitarav api

📜Prediction 12:

In Kali-yuga men will develop hatred for each other even over a few coins. Giving up all friendly relations, they will be ready to lose their own lives and kill even their own relatives.

Source: Srimad Bhagavatam 12.3.41

kalau kakinike ‘py arthe
vigrihya tyakta-sauhridah
tyakshyanti ca priyan pranan
hanishyanti svakan api

📜Prediction 13:

Uncultured men will accept charity on behalf of the Lord and will earn their livelihood by making a show of austerity and wearing a mendicant’s dress. Those who know nothing about religion will mount a high seat and presume to speak on religious principles.

Source: Srimad Bhagavatam 12.3.38

sudrah pratigrahishyanti
tapo-veshopajivinah
dharmam vakshyanty adharma-jna
adhiruhyottamasanam

📜Prediction 14:

Servants will abandon a master who has lost his wealth, even if that master is a saintly person of exemplary character. Masters will abandon an incapacitated servant, even if that servant has been in the family for generations. Cows will be abandoned or killed when they stop giving milk.

Source: Srimad Bhagavatam 12.3.36

patim tyakshyanti nirdravyam
bhritya apy akhilottamam
bhrityam vipannam patayah
kaulam gas capayasvinih

📜Prediction 15:

Cities will be dominated by thieves, the Vedas will be contaminated by speculative interpretations of atheists, political leaders will virtually consume the citizens, and the so-called priests and intellectuals will be devotees of their bellies and genitals.

Source: Srimad Bhagavatam 12.3.32

dasyutkrishta janapada
vedah pashanda-dushitah
rajanas ca praja-bhakshah
sisnodara-para dvijah

Despite all of these dark prophecies, there is one good quality in this age of Kali yuga:

kaler dosha-nidhe rajann
asti hy eko maha gunah
kirtanad eva krishnasya
mukta-sangah param vrajet
J i

“Although Kali-yuga is an ocean of faults, there is still one good quality about this age: simply by chanting the names of God, one can become free from material life and can have transidental freedom.’

Importance of 108 number

Importance of 108 number!

When we see number of beads in vara mala/vrata mala, number of names of God and Goddess, I always wondered there should be some prominence for 108 which I do not know. Why do we give so much importance to 108 in Hinduism? Why 108 is so sacred for Hindus? Here is a brief explanation of the use and importance of this number:

The diameter of the Sun is 108 times the diameter of the Earth.

The distance from the Sun to the Earth is 108 times the diameter of the Sun.

The average distance of the Moon from the Earth is 108 times the diameter of the Moon.

In Ayurveda, there are 108 “Marma” points that are vital for giving life to living beings.

The powerful Sri Chakra yantra intersects in 54 points each with a masculine and feminine quality, totalling to 108

In Indian astrology we have 12 houses and 9 plants. 12 times 9 equals to 108.

In Tantra, it is estimated that every day we breathe 21,600 times out of which 10,800 are solar energy and 10, 800 are lunar energy. Multiplying 108 X 100 is 10,800.

The famous saint Bharata wrote “The Natya Shastra” which has 108 karanas (Movement of hand and feet)

There are 54 letters in Sanskrit each can be mentioned as masculine (Shiva) and feminine (Shakti) aspect, totalling to 108.

There are 108 Puranas and 108 Upanishads.

9 times 12: Both of these numbers have been said to have spiritual significance in many traditions. 9 times 12 is 108. Also, 1 plus 8 equals 9. That 9 times 12 equals 108.

Powers of 1, 2, and 3 in math: 1 to 1st power=1; 2 to 2nd power=4 (2×2); 3 to 3rd power=27 (3x3x3). 1x4x27=108
Harshad number: 108 is a Harshad number, which is an integer divisible by the sum of its digits (Harshad is from Sanskrit, and means “great joy”)

Desires:
There are said to be 108 earthly desires in mortals.

Lies:
There are said to be 108 lies that humans tell.
Delusions: There are said to be 108 human delusions or forms of ignorance.

Heart Chakra:
The chakras are the intersections of energy lines, and there are said to be a total of 108 energy lines converging to form the heart chakra. One of them, sushumna leads to the crown chakra, and is said to be the path to Self-realization.

Pranayama:
If one is able to be so calm in meditation as to have only 108 breaths in a day, enlightenment will come.

Sri Yantra:
On the Sri Yantra there are marmas where three lines intersect, and there are 54 such intersections. Each intersection has masculine and feminine, shiva and shakti qualities. 54 times 2 equal 108. Thus, there are 108 points that define the Sri Yantra as well as the human body.

Pentagon:
The angle formed by two adjacent lines in a pentagon equals 108 degrees.

Time:
Some say there are 108 feelings, with 36 related to the past, 36 related to the present, and 36 related to the future.

Astrology:
There are 12 constellations, and 9 arc segments called namshas or chandrakalas. 9 times 12 equal 108. Chandra is moon, and kalas are the divisions within a whole.

River Ganga:
The sacred River Ganga spans a longitude of 12 degrees (79 to 91), and latitude of 9 degrees (22 to 31). 12 times 9 equal 108.

Gopis of Krishna:
There were said to be 108 gopis or maid servants of Krishna.

1, 0, and 8:
Some say that 1 stands for God or higher Truth, 0 stands for emptiness or completeness in spiritual practice, and 8 stands for infinity or eternity.

Silver and the moon:
In astrology, the metal silver is said to represent the moon. The atomic weight of silver is 108.

Numerical scale:
The 1 of 108, and the 8 of 108, when added together equals 9, which is the number of the numerical scale, i.e. 1, 2, 3 … 10, etc., where 0 is not a number.

Meditations:
Some say there are 108 styles of meditation.
Paths to God: Some suggest that there are 108 paths to God.

Jain:
In the Jain religion, 108 are the combined virtues of five categories of holy ones, including 12, 8, 36, 25, and 27 virtues respectively.

Sikh:
The Sikh tradition has a mala of 108 knots tied in a string of wool, rather than beads.

Buddhism:
Some Buddhists carve 108 small Buddhas on a walnut for good luck. Some ring a bell 108 times to celebrate a new year. There are said to be 108 virtues to cultivate and 108 defilements to avoid.

Chinese:
The Chinese Buddhists and Taoists use a 108 bead mala, which is called su-chu, and has three dividing beads, so the mala is divided into three parts of 36 each. Chinese astrology says that there are 108 sacred stars.

Stages of the soul:
Said that Atman, the human soul or center goes through 108 stages on the journey.

Meru:
This is a larger bead, not part of the 108. It is not tied in the sequence of the other beads. It is the guiding bead, the one that marks the beginning and end of the mala.

Praiseworthy souls:
There are 108 qualities of praiseworthy souls.

Japan:
In Japan, at the end of the year, a bell is chimed 108 times to finish the old year and welcome the new one. Each ring represents one of 108 earthly temptations a person must overcome to achieve nirvana.

108 signifies the wholeness of the divinity, perfect totality. So, let us follow what our ancestors told us to do.

Ram….Ram….

ஆலய அதிசயங்கள் – தேப்பெருமாநல்லூர்

மறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும்

மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப்படுகிறது.

மிகவும்  பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாறாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர். “யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள் தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்” என்று சொல்கிறார் ஆலய குருக்கள். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசைநோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வையால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர். பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?

சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், “நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள். எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனி பகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்று விட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

“என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?” என்று கேட்டாள். சனி பகவான், “நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்ததல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்” என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள் முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, “ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை. அம்பாளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபியானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். “ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது.
எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்” என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர் லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார். இதனைக் கண்ட நாரதர், “இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படியிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்” என்று போற்றிப் புகழ்ந்தார்.

“பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும் தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்” என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீ விசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, “மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்” என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், “பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்” என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, “மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படி தான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது” என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், “மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார். உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார்.

ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால் தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் ஒருவர்.

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம் பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர் லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், “நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்” என்று ஆறுதல் கூறினார்.

பிரகதீஸ்வரர்

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள். ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின் போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதியர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத்திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு அருகில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர். இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது. சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படர்வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.

இடி இடிக்கும் போது, அர்ஜுனா என்று சொல்வது ஏன்…?

மழை பெய்யும் போது இடி இடிக்கும்போதும் #அர்ஜுனா_அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். உண்மையில் உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா? இடி இடிக்கும் போது சிலரது காது அடைத்து ஒருவிதமான சப்தம் கேட்கும்.. இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும் காது அடைக்காது.
“அர்” என்று சொல்லும்போது நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். “ஜு” என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும். “னா” என்னும் சொல்லும் போது வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும் இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதற்குதான் அர்ஜுனாவை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள். அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால் அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன் காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைத்து, அன்று முதல் இன்று வரை அர்ஜுனா என்றே சொல்லாகிற்று.

இறைவனிடம் அடம்பிடிக்கும் ஆத்மா…

ஸ்ரீராமஜெயம்

ஆத்மா…

பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற் போரே நடக்குமாம்..

இந்த கலியுகத்தில் நான் பிறக்க மாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்..

அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம்.

நீ பிறக்கும் பொழுது நீ இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்து அனுப்புகிறேன்.

அந்த இரண்டை கொண்டு
நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்.

இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்..

இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது.உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன்
நீ என்னை அழைத்தால் ஒழிய.

இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது. ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை
உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்.

இறைவன் கொடுத்த விளக்கங்களும் உண்மைகளும்

ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம்..

ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு..

எல்லாம் ஞாபகம் வந்து இறைவனை அழைக்குமாம்..

என்னை இனி மேல் பிறக்க வைக்காதே. எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம்.

அப்பொழுது “ஷடம்” என்னும் வாயு இறைவனை அழைக்கும் ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்.

அந்தக் கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம், ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது.

சிசு குழந்தையாக பிறந்து இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும் விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் இருந்து பிறந்து விடுகிறோம்.

வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட “சடாரி” என்னும் பாதத்தை நம் தலையில் வைப்பார்கள்.

அது ஏதற்கு என்றால் “நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைனவாகவே இருக்க வேண்டும்.

மறதியை கொடுக்காமல் ஷடம் என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும் படி எனக்கு அருள்வாயாக என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்.

நாம் நினைப்பது என் காதுகளில் விழுகிறது.இறைவன் எவ்வளவு கொடியவன் என்று. நாம் நினைப்பது மிகப்பெரிய தவறு. இந்த உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு குழந்தை பிறக்கையிலே வாழக்கூடிய இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் இறைவன். ஒன்று ஆத்மா மற்றொன்று மனசு.. .

நமது ஆத்மாவை ஆதரமாக கொண்டு வாழ்ந்தால் இறைவனை சென்றடையலாம்..

நமது மனதை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தால் பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். முடிவு நம் கையில்.

ஒவ்வொரு ஜீவனுக்கும் ஜீவ ஸ்வாதந்த்ரியம் என்னும் ஜீவனுக்குண்டான சுதந்திரத்தை கொடுத்து தான் அனுப்புகிறான்.

ஆத்மா இறைவனுக்கும் நமக்கும் உண்டான பாலம். மனசு நமக்கும் இந்த பூலோகத்திற்கும் இருக்கும் பாலம். வாழும் வகை நம் கையில் தான் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேல் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறான்.

இதயத்தின் வலது பாகத்தில் ஒரு நெல்லின் நுனியை நூறு பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு சிறு பகுதி மிஞ்சுமே அந்த அளவில் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருகிறான்.

இறைவனின் ஐந்து அவதாரங்களில் இந்த அந்தர்யாமி அவதாரமும் ஒன்று.

நாம் எல்லோருமே இறைவன் நமக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதை அனுபவித்து இருக்கலாம். நாம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும் பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும்  அந்தக் குரலுக்கு சொந்தகாரர் இறைவனே..

இறைவன் ஒவ்வொரு பிறவியிலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்க இருக்க காரணம். மனிதனுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது எந்த நொடியிலும் வரலாம்.. ஏதாவது ஒரு பிறவியில் இவன் திருந்தி ஆத்மாவை ஆதாரமாக கொண்டு வாழ ஆரம்பித்து இறைவனை அழைத்தால் அந்த நொடியே இவனை ஆட்கொண்டு வழி நடத்தி தன்னுடன் அழைத்துக் கொள்ளத்தான்..

நாம் அனைவருமே இறைவனின் சொத்து. இறைவன் அவன் சொத்தை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனையும் கையாண்டு நம்மை அடைய முயற்சிக்கிறான். ஆனால் நாம் ஒவ்வொரு பிறவியிலும் இறைவனையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி கொள்கிறோம்.

திரும்பவும் நமக்கு ஞானம் வருவகற்கு அறுபது வருடமாகிறது. இது ஒரு தொடர் கதையாக ஆகி விட்டது.

உடல் சூட்டை குறைப்பது எப்படி…?

*உடல் சூட்டை குறைப்பது எப்படி ?*

சித்த மருத்துவத்தில் நிலம், பொழுது இரண்டும் முதற்பொருள் எனப்படுகிறது. வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் உடல் நிலையும், குணமும் மாறுபடுவது போல், காலத்திற்கு ஏற்றவாறு உடல்நிலை, மனம் மாறுபடும்.

கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து, வறட்சி ஏற்படுவதால், பூமியின் இயற்கை குணம் மாறுபட்டு உயிரினங்கள் உடல்நலத்தை இழக்கின்றன. மனிதனின் உடல் கோடையின் போது வறட்சி, அக்கினி, குரூரம், சலரூபம், புளிப்பு, காரம் என 6 குணங்களை அடைகிறது. நம் உடல் அமைப்பின் உறுப்புகள் 70-80 சதவீதம் நீரால் ஆனது. வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து 20-30 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில், உடல் வெப்பம் அடைவதாலும், உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பல வகை அம்மைகள் ஏற்படுகிறது. ‘அக்கி’ மிக முக்கியமானதாகும். நீர்ப்பை, நீர்ப்பாதையில் வெப்பம் அதிகரித்து நீர்கடுப்பு, நீர்கட்டு, கல்லடைப்பு, வெள்ளைபடுதல், நீர்வேட்கை போன்ற நோய்கள் வருவதுண்டு, வறட்டு இருமல், ரத்த அழுத்தம், தலைவலி, உடல் கொப்பளங்கள், பரு, ஆசன வாய் எரிச்சல், மூலம் போன்றவை கோடையில் அதிகம் தாக்கும் நோய்கள்.

தடுப்பு முறைகள்:

கொப்பளம், பரு அம்மை இவைகளுக்கு வேப்பிலை, மஞ்சள் கலந்து அரைத்து பூசலாம். தோலில் வறட்சியை ஏற்படுத்தும் வாசனை சோப்புகளை தவிர்த்து, பாசிப் பயறு, கடலைமாவு கலந்து பயன்படுத்துதல் நல்லது. வெப்பத்தால் சிலருக்கு உள்ளங்கால் எரிச்சல் ஏற்படும். அதற்கு இரவு படுக்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெய் பூசி வெதுவெதுப்பான நீரில் 5 முதல் 10 நிமிடம் உள்ளங்காலை மூழ்க வைத்திருந்தால் உடல் சூடு தணியும். அடி வயிற்றில் தொப்புளை சுற்றி ஆமணக்கு எண்ணெய் தடவலாம். தலைக்கு சந்தனாதி தைலம் தடவி வர உடல் வெப்பம் தணியும். நீர் வேட்கை, உடல் எரிதல் இவற்றிற்கு சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசி குளிக்கலாம்.

உணவு முறைகள்:

கோடையில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது நம் உடல் உஷ்ணத்தை தவிர்ப்பது எப்படி என்பதைத்தான். மிக எளிமையான முறை, தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான். தயிர், மோர், பால், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மாதுளை, எலுமிச்சை, வெள்ளரி, திராட்சை, இளநீர் சாப்பிடுவதுடன், தர்பூசணி, நார்த்தை, நெல்லி, பேயன் வாழை தினம் சேர்த்துக் கொள்வது கட்டாயம். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால், வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியும். வெட்டி வேர், விளாமிச்சை வேர் கலந்த நீர் குடிக்கலாம். வெந்தயத்தை சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவலாம். மேலும் தண்ணீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்நீரை அருந்தலாம். மூலம், வயிறு எரிச்சலுக்கு பசு நெய் நன்று. கீரைகளை சூப் வைத்து குடிக்கலாம். அவற்றை துவையல், மசியல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

கீரைகளின் பயன்கள்:

பசலை கீரை வெள்ளைபடுதல், நீர்கடுப்பை போக்கும். சீறுகீரை: காய்ச்சல் பாதம் எரிச்சல், கண் புகைச்சலை போக்கும். பொன்னாங்கன்னி கீரை: உடல்சூடு, மூலம், உஷ்ணம் போக்கும். முருங்கைக்கீரை: உடல்சூடு, வெயிலினால் உண்டாகும் தலைவலி நீக்கி உடலில் பொன் நிறத்தை உண்டாக்கும். புளியாரை கீரை: ரத்தமூலம் போக்கும். வாழைப் பூ: ரத்த மூலம், கால் எரிச்சல் போக்கும். கீரைத்தண்டு: வெப்பம், பித்த எரிச்சல், வெளிமூலம் போக்கும். பிரண்டை தண்டு: மூலம், அல்சர் குணமாக்கும். சோற்றுக் கற்றாழை: உடல் வெப்பம், வெள்ளை படுதல் போக்கும். நெற்பொரி: அதிக தாகத்தை குறைக்கும். சம்பா கோதுமை: ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். கேழ்வரகு, கம்பு போன்றவற்றை முதல் நாள் மாலை சமைத்து நீரிலிட்டு அடுத்த நாள் மோர் சேர்த்து கூழாக சாப்பிட்டால் உடல் வெப்பம் குறையும். மருதாணி, பாதத்தில் தடவ எரிச்சலை போக்கும். மருதாணி பூவை இரவில் தலையணை அடியில் வைத்து படுக்க நிம்மதியான தூக்கம் கிடைப்பதுடன், உடல் வெப்பம் சீராகும். இவற்றுடன் வாழைப்பூ, கீரைத்தண்டு, பிரண்டை, சிறு தானியங்கள் சேர்த்துக் கொள்வதால் உடல் சூட்டை தவிர்ப்பதுடன், கோடை நோய்களில் இருந்து தப்பிக்கலாம். மருதாணி, சோற்றுக் கற்றாழை உடல் வெப்பத்தை போக்கும் மூலிகைகளாகும்.

எண்ணெய் குளியல்:

தினமும் 2 முறை குளிப்பது, எண்ணெய் குளியல், உடல் சூட்டை முற்றிலும் தவிர்க்கும். எண்ணெய்யை உச்சி முதல் உடலில் அனைத்து பாகங்களிலும் சூடு எழுப்பாமல் குளிர தேய்க்க வேண்டும். உடலை பிடித்தும், மெதுவாக தட்டியும் வருவதால், ரத்த ஓட்டம் அதிகமாகும். எண்ணெய்யை தேய்த்து சிறிது நேரம் ஊறவிடுவதால், எண்ணெய் சத்துக்கள் உடலினுள் செல்லும். தவிர கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்ப விதைகள், கடுக்காய் தோல், நெல்லிப்பருப்பு இவைகளை அரைத்து காராம் பசுவின் பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து குளித்தால் எந்நாளும் பிணிகள் வராது, என சித்தர்களின் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இலவம் பஞ்சு படுக்கையில் படுத்தல் நன்று. காரம், புளிப்பு, உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டை சுற்றி மரம் வளர்க்க வேண்டும். மாடி வீடுகளில் வசிப்பவர்கள் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கலாம். தினம் வீட்டிற்குள் தரையை தண்ணீரால் துடைக்கவோ அல்லது சிறிதளவு தண்ணீரை மதியம் தெளித்து விட்டாலோ தரை சூடு குறையும். வீட்டினுள் காற்றோட்டம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது.

*வாழ்க குளிர்ச்சியுடன்*

பிராமணர்கள் ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்‬?

‪ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்‬?

அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது.

அவரவர் குல முதல்வர்கள் என்னும் படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.

அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.

சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.

நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.

“ரிஷி” என்ற சொல்லுக்கு ‘பார்ப்பவர்’ என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.

அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.

ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.

‘அபிவாதயே’ என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம். அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.

ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.

கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.

திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் ‘இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.

இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது.

(1)அபிவாதயே,
(2) _______ _______ ______ (ரிஷிகளின் பெயர், உங்கள் கோத்திரத்திற்கேற்ப, கீழ்கண்ட பட்டியலில் காணவும்.)
(3) ____________ (உங்கள் கோத்திரத்திற்கேற்ப…, – ஏகா, த்வயா, த்ரயா, பஞ்சா, ஸப்தாரிஷேய
என்பனவற்றை கூட்டிக்கொள்ளவும்),
(4) ப்ரவரான்வித:
(5) _______________ ஸூத்ர (ஆபஸ்தம்ப ஸூத்ர, போதாயன ஸூத்ர),
(6) _______________ (யாஜூஷா, ஸாமோ, ரிக் -)காயாதி
(7) ________________ கோத்ரஸ்ய (உங்கள் கோத்ரம்)
(8) ______________________ (உங்கள் பெயர்)
(9) சர்மண: அஹம் அஸ்பிபோ.

ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;

1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது – திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.

2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது

3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.

4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.

5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.

எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;

1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்

2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.

3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.

4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.

5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்.

முதலில் அபிவாதனத்தில் அதே வரிசைக் கிரமத்தில் ஆதி முதல் ரிஷி, அவர் பிள்ளை, பேரர் என்று கோத்ரத்தைத் தெரிவிப்பார்கள். அப்புறம் பித்ருக்களின் வரிசை, ஆனால் அப்பா – தாத்தா – கொள்ளுத் தாத்தா என்று தர்ப்பணத்தில் சொல்லுகிற கிரமத்தை இங்கு மாற்றி கொள்ளுத்தாத்தா – தாத்தா-
அப்பா என்று சொல்லுவார்கள்.

அபிவாதனத்தில் முதலில் மூல ரிஷிகளின் பெயர்கள் வரும் என்பது தான் இங்கே முக்கிய விஷயம். அப்புறம் அந்த கோத்ரப் பெயரும், அப்புறம் கர்மாக்களை வகை தொகைப் படுத்திக் கொடுக்கும் ஸூத்ரங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும், அப்புறம் நாலு வேதங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும் வரும். அந்த வேத சாகையைத்தான் அத்யயனம் பண்ணுவதாக வரும் (இந்தக்
காலத்தில் பண்ண வேண்டியவன் என்று வைத்துக் கொள்ளலாம்!) – முடிவாகத் தன் பெயரைச் சொல்லி போ (Bhoh) – அதாவது ‘பெரியவரே’ , ‘ஐயனே’ என்று நமஸ்கரிக்கப்படுபவரைக் கூப்பிட்டு நமஸ்காரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இன்ன ரிஷிகளைக் கொண்ட, இன்ன கோத்ரக்காரன், இன்ன ஸூத்ரக்காரன், இன்ன வேத சாகையை அத்யயனம் பண்ணும் இன்ன பெயருள்ளவனாக இருக்கிறேன் ஐயா!’ என்று மொத்தத்தில் அர்த்தம் கொடுக்கும்.
இப்பேர்ப்பட்ட குடியின் வழித்தோன்றலாக, இன்ன பெயர் கொண்ட நான் இருக்கிறேன், என்பதாகக் குடியைச் சொன்ன பிறகு, தன்னுடைய பெயரை ஒருத்தன் சொல்லுவதாக அபிவாதனத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் – இத்தனைக்கும் ஆரம்பம் – ‘அபிவாதயே’ – சரி வரச் சொல்லுகிறேன், அதாவது அறிமுகம் பண்ணிக் கொள்கிறேன் என்று நேர் அர்த்தம் – தங்களுடைய ஆசீர்வசனத்தை (மறுமொழியை) வேண்டிச் சொல்கிறேன் என்று நீட்டி அர்த்தம் சொல்லுவதுண்டு.
ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் சொல்லக் கூடாது. கோயில்களிலும், வீட்டுப் பூஜைகளிலும் நமஸ்கரிக்கிறபோது அபிவாதயே சொல்லக் கூடாது. சபைக்கு நமஸ்காரம் செய்யும்போதும் அபிவாதயே கிடையாது. ஸ்த்ரீகளில், தாயாரைத் தவிர, மற்றவர்களுக்கு அபிவாதனம் இல்லாமலேதான் நமஸ்காரம்.

The List of Brahmin Gotras,

    Aamat

Agastya

    Ainakula

    Audala

    Angirasa

    Atri

    Akshinthala

    Aatreya

    Bharadwaj

    Bhargava

    Bhrigu

    Brihadbala

    Chandratre

    Dhananjaya

    Dubey

    Garg

    Gautam

    Gaur

    Harinama

    Haritasya

    Jamadagni

    Jilakara

    Kadam

    Kashyapa

    Kaushal

    Kaplansh

    Kaundinya

    Kutsa

    Manu

   Mouthkalya

Sadamarshana

    Sabarniya

    Marichi

    Nanda

    Nageswar

Naithrubha Kashyaba

    Parashar

    Sandilya

    Saroha Village Luhara

    Shiva(Shiv-adi)

    Siwal

    Srivatsa

    Tayal

    Upamanyu

    Upreti

    Uttam

    Vashista

    Vishnu

    Vishvamitra

    Vishrava

    Shringi

    Khilaivar

    Pachori

    Nandhi

Kapisa: Angirasa,Bharadwaja,Matavacha,Bharhaspatya,Vaandana – it is pancha pravarPautamarshi:Angirasa,Barhaspatya,Jamdagni,Apnuvat -it is pancha pravarKundina Gowthama :Angirasa, Ayasya, Kundina GowthamaBharadwaja: Angirasa, Barhaspatya, BharadwajaVadula,Savarni,& Yaska: Bhargava,Vaitahavya,Saavedasa(do not intermarry)Maitreya:Bhargava,Daivodasa,VadhryasvaShaunaka:Shaunaka(ekarsheya)Gartsamada:Bhargava,Sunahotra,GartsamadaVatsa/Srivatsa: Bhargava, Chyavana, Apnavana/Apnuvat, Aurava, JamadagnyaAarshtisena: Bhargava, Chyavana, Apnavana,Aarshtisena,AnupaBidasa:Bhargava, Chyavana, Apnavana/Apnuvat, Aurava,BaidaSaavarni:Bhargava,Vaitahavya,SavedasaShatamarshana: Angirasa, Powrukutsa,TraasatasyaAAtreya/Krishnatreya: Atreya,Aarchanaasa,SyaavaasvaVadhbhutaka: Atreya,Aarchanaasa,VadhbhutakaGavisthiras:Atreya,Gavisthira,PurvatithaKoushika: Vaiswaamitra,Aghamarshana,KoushikaKalabodhana/Kalaboudha: Viswaamitra,AAgamarshana,Kalabodhana/KalaboudhaBhargava:Bhargava, Tvashta,VishvaroopaViswamitra: Vaiswaamitra,Devaraata, OwtalaKowndinya: Vashista,Maitraavaruna, Bayan, KowndinyaKapinjala:Vashista,Aindrapramada,AbharadvasavyaVashista:Vashista(ekarsheya)Harita/Haritasa:(2 Variations)Harita, Ambarisha,YuvanasvaAngirasa, Ambarisha,YuvanasvaGautamasa: Angirasa,Aayasyasa,GautamaDhanvantari: Angirasa,Barhaspatya,Avatsara,NaidhrubaMowdgalya(3 Variations)Angirasa,Bharmyasva,MowdgalyaTarkshya,Bharmyasva,MowdgalyaAngirasa, Dhavya, MowdgalyaSandilya (2 Variations)Kasyapa,Aavatsaara,DaivalaKasyapa,Aavatsaara,SandilyaKasyapa, Daivala, AsithaNaitruvakaasyapa: Kasyapa,Aavatsara,NaitruvaKutsa/Kauchhsa: Aangirasa,Maandhatra,KoutsaKapi: Angirasa, Aamahaiya,OrukshayaKapila: Angirasa, Aamahaiya,OrukshayaKanva (2 Variations)Angirasa,Ajameeda,KaanvaAngirasa,Kowra, KaanvaParaasara: Vashista, Shaktri, Paarasarya, PaingUpamanyu: Vashista,Aindrapramada,BhadravasavyaAagastya: Aagastya,Tardhachyuta,SowmavahaGargyasa (2 Variations)Angirasa,Bharhaspatya,Bharadwaja,Sainya,GargyaAngirasa, Sainya, GaargyaBhadarayana: Angirasa,Paarshadaswa, RaatitaraKashyapa: Kasyapa, Aavatsaara, DaivalaSankriti (2 Variations)Angirasa,Kowravidha,SaankrityaSadhya,Kowravidha,SaankrityaSuryadhwaja: Lakhi (Mehrishi), Soral, BinjuDaivaratasa:Viswamitra,Daivaratasa,Avudhalachikitasa—viswamitra,Devarata,AghamarshanaShaktri : Vashistha, Shaktri,ParasharJaabaali/Jabali : Bhargava, Vaithahavya, Raivasa – ThrayarisheyaVishnuvridha/Vishnuvardhanu : Angirasa, Pourukutsa, Thraasadasya.

அறிவோம் ஆலயம் ஆயிரம் – மருதமலை

*மன அமைதி தரும் மருதமலை முருகன் கோவில்*
   
முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. 

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வாக்கு. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை.

அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர் இத்தல முருகப்பெருமான். இந்த ஆலயம் முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படுகிறது. 

*அர்த்தஜாம பூஜை*

மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே கருவறையில் இருக்கிறது.

இரண்டு கரங்களுடன் உள்ள இந்த முருகப்பெருமான், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார்.

தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்களுடன் காட்சி தருவார்.

விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை மற்றும் தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிவிக்கப்படும்.

அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இத்தல இறைவனை, தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும்.

அப்போது இறைவனுக்கு ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர்.

*பாம்பாட்டி சித்தர்*

மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டி சித்தர் சன்னிதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடியும் வைத்து இவர் அருள்பாலிக்கிறார்.

இவருக்கு அருகில் சிவலிங்கம், நாகர் திருமேனி கள் உள்ளன. முருகப்ெபருமானுக்கு பூஜை முடிந்ததும், பாம்பாட்டி சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது.

பாம்பாட்டி சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னிதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள்.

மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.

*பாம்பு முருகன்*

பாம்பாட்டி சித்தர் சன்னிதியில் உள்ள பாறையில் நாக வடிவம் ஒன்று காணப்படுகிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டி சித்தருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்ததாக தல புராணம் சொல்கிறது.

இந்த நாகத்தை முருகப்பெருமானாகவே பாவித்து பக்தர்கள் அனைவரும் வழிபாடு செய்கிறார்கள்.

இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளன. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள்.

பொதுவாக முருகன் தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும்.

*பஞ்ச விருட்ச விநாயகர்*

பொதுவாக அரச மரத்தின் அடியில் தான் விநாயகப்பெருமான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்கும் மரத்தின் அடியில் விநாயகப் பெருமான் இருந்து அருள் பாலிக்கிறார்.

ஐந்து மரங்கள் இணைந்த ஒரே மரத்தின் அடியில் இருப்பதால் இவரை, ‘பஞ்ச விருட்ச விநாயகர்’ என்று அழைக்கிறார்கள்.

இவருக்கு அருகில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்தபடி, கையில் வேலுடன் காட்சி தருகிறார்.

*மருதாச்சல மூர்த்தி*

மருத மரங்கள் நிறைந்ததும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருள்பவர் என்பதால், இத்தல முருகனுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்ற பெயரும் உண்டு.

மருத மரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் ‘மருது சுனை’. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது.

மலையில் உள்ள ஒரு மருத மரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள்.

இந்த தீர்த்தமே சுவாமியின் அபிஷே கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

*சோமாஸ்கந்த தலம்*

சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, ‘சோமாஸ்கந்த அமைப்பு’ என்பார்கள். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில் தான் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் (சிவன்) சன்னிதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை (அம்பாள்) சன்னிதியும் உள்ளன.

*தம்பிக்கு உகந்த விநாயகர்*

மருதமலை கோவிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் ‘தான்தோன்றி விநாயகர்’ சன்னிதி இருக்கிறது.

இங்கு விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு, உடல் இல்லை.

இவர், மலையிலுள்ள முருகன் சன்னிதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவது சிறப்பம்சம்.

அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது.

முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.

எனவே இவரை, ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

*குதிரையில் வந்த முருகன்*

முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், ஒரு சில ஊர்களிலுள்ள கோவில்களில் அவரை விழாக் காலங்களில் குதிரையில் எழுந்தருளச் செய்வர்.

இதற்கு காரணம் என்ன தெரியுமா? முற்காலத்தில் இக்கோவிலில் திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர்.

அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோவிலில் சேர்க்கச் செய்தார்.

அதோடு திருடர்களை பாறையாகவும் மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது.

மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இக்கல்லை ‘குதிரைக்குளம்பு கல்’ என்கிறார்கள். இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் இருக்கிறது.

*ஆதி முருகன்*

புராதனமான சிவன் கோவில்களில் சிவன், சுயம்பு லிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார்.

இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்பு வடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் ஒரு பிளவு இருக்கிறது.

வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர்.

இந்த முருகனே இத்தலத்தின் ஆதி மூர்த்தி ஆவார். இவரது சன்னிதி ‘ஆதி மூலஸ்தானம்’ எனப்படுகிறது.

இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையில் பக்தர்கள் இவருக்கு அதிகளவில் பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

ஏகாதசி விரதம் பற்றிய தகவல்கள்…

ஏகாதசி விரதம் பற்றிய தகவல்கள்

ஜீவ கோஸ்வாமியின் பக்தி ஸந்தர்ப்ப நூலில், ஸ்காந்த புராணத்தில் இருந்து ஒரு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது . ஏகாதேசியன்று தானியங்களை உண்பவன் தனது தாய், தந்தை,  சகோதரர் மற்றும் ஆன்மீக குருவை கொலை செய்தவனாகின்றான் என்றும், அவன் வைகுண்ட லோகத்திற்கு ஏற்றம் பெற்றால் கூட வீழ்ச்சியடைகின்றான் என்றும், அங்கே எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏகாதேசியன்று தானியங்கள், பருப்பு வகைகள் உள்பட அனைத்து தினசரி உணவும் விஷ்ணுவிற்கு சமைக்கப்படுகின்றன,  ஆனால் அந்த விஷ்ணு பிரசாதத்தினைக்கூட ஏகாதசியன்று ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வைஷ்ணவர் அறிவுறுத்தப்படுகிறார். பகவான் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்படாத எந்த உணவுப் பொருட்களையும் வைஷ்ணவன் ஏற்ப்தில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், ஏகாதசியன்று விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்ட மகா பிரசாதத்தினைக்கூட வைஷ்ணவன் தீண்டக் கூடாது ; அத்தகு பிரசாதம் அப்படியே வைக்கப்பட்டு மறுநாள் உண்ணப்படலாம். பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியம் செய்யப்பட்டதாக இருந்தாலும், ஏகாதசியன்று எந்த வகையான தானியத்தையும் ஏற்பதிலிருந்து ஒருவன் கண்டிப்பாகத் தடை செய்யப் படுகிறான்.

(பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை / 15. 10 )